சென்னை: தீபாவளியையொட்டி மதுபானங்கள் விற்பனை அமோ கமாக நடைபெறும் என்று எதிர் பார்க்கப்பட்டது. இதற்கு தேவையான சரக்கு களும் இருப்பில் வைக்கப்பட்டன. ஆனால் எதிர்பார்க்கப்பட் டதைப்போல மதுபானங்கள் விற் கப்படவில்லை. சுமார் 240 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகியுள்ளது. இது, 2016 தீபாவளியைவிட 90 கோடி ரூபாய் குறைவாகும். தமிழக அரசின் 'டாஸ்மாக்' கடைகளில் ஆண்டுதோறும் தீபா வளிப் பண்டிகை நாளில் 'பீர்', மதுபான வகைகள் விற்பனை அதிகமாக இருக்கும். கடந்த 2016 தீபாவளி பண்டி கையின்போது இரு நாட்களில் 330 கோடி ரூபாய்க்கு மது பானங்கள் விற்பனையானதால் இம்முறை தீபாவளிக்கு 500 கோடி ரூபாய்க்கு மேல் மது பானங்கள் விற்பனையாகும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எதிர் பார்த்தது.
இந்தக் கணிப்பை மதுபானப் பிரியர்கள் பொய்யாக்கிவிட்டனர். இது குறித்து பேசிய டாஸ்மாக் அதிகாரி ஒருவர், "அண்மையில் மதுபானங்களின் விலை உயர்த் தப்பட்ட பிறகும் விற்பனை பாதிக்கப்படவில்லை. தீபா வளிக்கு பணப்புழக்கமும் சிறப் பாக இருந்ததால் 500 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை யாகும் என்று எதிர்பார்த்தோம்," என்றார். இதனால் 700 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் கடைகளில் இருப்பு வைக்கப் பட்டன. குறிப்பாக தீபாவளிக்கு முந்தைய நாளில் மதுபானங்கள் விற்பனை அமோகமாக இருக் கும். ஆனால் அன்று 80 கோடி ரூபாயும் தீபாவளி நாளில் 160 கோடி ரூபாய் என இரண்டு நாட்களில் 240 கோடி ரூபாய்க்குத்தான் மதுபானங்கள் விற்றுள்ளன. இது கடந்த ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில் 90 கோடி ரூபாய் குறைவாகும்.

