'திமுகவில் அதிமுக ஆதரவாளர்கள் 40 பேர் உள்ளனர்'

'திமுகவில் அதிமுக ஆதரவாளர்கள் 40 பேர் உள்ளனர்'

1 mins read

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு சுமார் 40 திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர் களாக இருப்பதாகவும் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக் கெடுப்பு நடத்தினால் அவர்கள் எடப்பாடியை ஆதரித்து வாக்களிப் பார்கள் என்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார், டிடிவி தினகரன் தரப்புக்கு 40 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தால், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப் படும்பட்சத்தில் எடப்பாடியை ஆதரித்து திமுக எம்எல்ஏக்கள் 40 பேரும் வாக்களித்து ஆட்சி யைக் காப்பாற்றுவார்கள் என்று கூறியதோடு 'ஸ்லீப்பர் செல்' களின் ஆதரவு பற்றி முதல் வருக்குத் தெரிந்திருக்க வாய்ப் பில்லை என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், "பிரதமர் மோடி ஆட்சியில் இருக்கும் வரை, எடப்பாடி பழனிசாமியின் அர சுக்கு எந்தப் பாதிப்பும் வராது," என்றும் ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டார். எனினும் இது, அவரின் தனிப்பட்ட கருத்து என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கு திமுகவில் 'ஸ்லீப்பர் செல்' எதுவும் இல்லை என திமுக மூத்த நிர்வாகி ஒருவர் பதிலுரைத்துள்ளார்.