சென்னை: தமிழகத்தில் உள் ளாட்சித் தேர்தல் எப்போது நடக்கும் என்ற கேள்விக்கு இன் னும் பதில் கிடைக்காத நிலையில், இன்று வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இந்த வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்க ளிடம் பேசிய தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக் கானி, சிறப்பு முகாம் மூலம் வாக் காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல் ஆகிய வற்றைச் செய்ய இயலும் என்றார். மேலும் வாக்காளர்கள் தங்கள் முகவரியை மாற்றுவதும் சாத்தியம் என அவர் தெரிவித்தார். இதற்கான படிவங்களை வாக் காளர்கள் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், பெயர் சேர்க்கும் விண் ணப்பத்துடன் வசிப்பிட முகவரி, வயதுச் சான்று ஆகியவற்றைச் சமர்பிக்க வேண்டும் என்றார். 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கண் டிப்பாக வயதுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ராஜேஷ் லக்கானி. படம்: ஊடகம்

