குடிநீர் இல்லை; காலி குடங்களுடன் சாலை மறியல்

குடிநீர் இல்லை; காலி குடங்களுடன் சாலை மறியல்

1 mins read
4a8038e1-4b69-4538-8c94-3d713ce33408
-

கோவை: கடந்த ஒன்றரை மாதங்க ளாக குடிநீர் விநியோகிக்கப்படா ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், கோவையை அடுத்த துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் பகுதி யில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. அசோகபுரம் ஊராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு கடந்த 45 நாட்களாக சீராக குடி நீர் விநியோகம் செய்யப்பட வில்லை. இது குறித்து பொதுமக் கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் பலன் இல்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் இடி கரை- அன்னூர் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நிலை குத்தியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த துடியலூர் போலிசார், துணை வட்டார வளர்ச்சி அலுவ லர் உள்ளிட்டோர், மறியலில் ஈடு பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.