தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர் தலும் சட்டமன்ற தேர்தலும் நடக்க இன்னும் அதிக காலம் இருக்கிறது என்றாலும் அதற்குள்ளாக அந்த மாநிலத்தில் அரசியல் சாணக்கியர் ஒருவர் முகாமிட்டு இருக்கிறார். ஒரு மாநிலத்தில் வெற்றி பெற வேண்டுமானால் ஓர் அரசியல் கட்சிக்கு எத்தகைய தொழில்நுட் பங்கள் தேவை என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் அந்தச் சாணக்கியர் வெற்றி ஆலோசனை களை வழங்குவதில் கைதேர்ந்தவர். பிரதமர், முதல்வர், வேட் பாளர்களின் நடை, உடை, பேச்சு போன்ற அனைத்தையும் வெற்றிகர மான முறையில் மாற்றி அமைக்கும் வித்தையை அறிந்த பிரசாந்த் கிஷோர் தமிழ்நாட்டில் மூன்று மாதம் தங்கி அரசியல் நோட்டமிடு வதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.ப
தமிழகத்தில் அரசியல் சாணக்கியர் நோட்டம்
1 mins read

