பிரியாணி கடை வைக்க வைர நகைகளைத் திருடிய ஆடவர் கைது

பிரியாணி கடை வைக்க வைர நகைகளைத் திருடிய ஆடவர் கைது

1 mins read

சென்னை: சமையல்காரராகப் பணியாற்றிய வீட்டில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளைத் திருடிய ஆடவர் கைதானார். சொந்தமாக பிரியாணி கடை வைப்பதற்காகவே நகைகளைத் திருடியதாக ஹனீஃபா என்ற அந்நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் நகைகளைத் திருடிச் சென்ற ஆறு மணி நேரத்துக்குள் போலிசார் அவரைக் கண்டுபிடித்து கைது செய்தனர். நெய்வேலி உட்பட பல்வேறு பகுதிகளில் பிரியாணி கடை நடத்தியுள்ளார் ஹனீஃபா. ஆனால் பெரியளவில் நஷ்டம் ஏற்படவே, கடையை மூடிவிட்டு தனியார் நிறுவனத்தில் காவலாளி யாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள கார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. இதற்காக சென்னை வந்தவருக்கு அந்நிறுவ னத்தின் நிர்வாக இயக்குநரான சீனிவாசனின் அறிமுகம் கிடைத் தது. ஹனீஃபா பிரியாணி சமைப் பதில் கைதேர்ந்தவர் என்பதை அறிந்த சீனிவாசன், அவரைத் தன் வீட்டிலேயே சமையல்காரராகப் பணியாற்றுமாறு கேட்டுக்கொண் டதுடன், கணிசமான ஊதியமும் அளிக்க முன்வந்தார்.