வயிற்றுக்குள் மறைத்து தங்கம் கடத்தியவர் கைது

வயிற்றுக்குள் மறைத்து தங்கம் கடத்தியவர் கைது

1 mins read

கோவை: வயிற்றுக்குள் தங்கக் கட்டிகளை மறைத்து கடத்தி வந்தவர் கோவை விமான நிலையத்தில் பிடிபட்டார். இலங்கையைச் சேர்ந்த 37 வயதான சத்தியசீலன் என்பவர் வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் இருந்து, கோவைக்கு வந்தார். வழக்கம்போல் பயணிகள் விமான நிலைய சுங்கச் சோத னைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது சத்தியசீலன் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவரை தீவிரமாகச் சோதித்த போது, அவர் தனது வயிற்றுக் குள் சில தங்கக் கட்டிகளை மறைத்துக் கடத்தி யது தெரிய வந்தது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று வயிற்றில் உள்ள தங்கக் கட்டிகளை வெளியே எடுக்கும் முயற்சியை அதிகாரிகள் மேற்கொண்டனர். தங்கக் கட்டிகள் முழுமையாக வெளியே எடுக்கப்பட்ட பிறகே அவற்றின் மதிப்பு தெரியவரும் என சுங்கத் துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித் தனர்.