சென்னை: தனது வகுப்பில் நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதிக்கும் மாணவிகளைத் தனது சொந்தச் செலவில் விமானத்தில் அழைத்துச் செல்கிறார் அரசுப் பள்ளி ஆசிரி யையான செல்வகுமாரி. சென்னை, அம்பத்தூரில் உள்ள காமராஜர் அரசுப் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரி யையாக இவர் பணியாற்றி வருகிறார். தன் வகுப்பு மாணவிகளை நன்கு படிக்க வைக்கவே விமானப் பயணம் என்ற பரிசை அறிவித்த தாகச் சொல்பவர், இதனால் மாண விகள் மத்தியில் படிக்க வேண்டும் எனும் ஆர்வம் அதிகரித்துள்ளது என்கிறார். ஒருமுறை பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு சமூக அறிவியல் பாடத்துக்காக உலக வரைபடத்தில் உள்ள இடங்களைக் குறிப்பது குறித்து பாடம் எடுத்துக்கொண்டி ருந்த போதுதான் செல்வகுமாரிக்கு விமானப் பயணம் என்ற பரிசை அறிவிக்கும் எண்ணம் தோன்றி உள்ளது. "பொதுத்தேர்வில் சமூக அறி வியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தால் சொந்தச் செலவில் விமானத்தில் அழைத்துச் செல்வேன் என அறிவித்தேன். இதனால் மாணவிகள் ஊக்கத் துடன் படிப்பார்கள் என எதிர் பார்த்தேன். அதன்படியே எல்லாம் நடந்து வருகிறது," என்கிறார் செல்வகுமாரி.
சரண்யாவுடன் செல்வகுமாரி. படம்: தகவல் ஊடகம்

