விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான 'மெர்சல்' படம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனக்கு எதிரான நிலைப் பாட்டை எடுத்திருப்பதால் பாரதிய ஜனதா கட்சி குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்திலிருந்து இந்தியா முழுவதும் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. இதற்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், 'மெர்சல்' படத்திலும் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா, மருத்துவத் துறை குறித்து சில வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அவை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் திட்டங்களைக் குறைகூறும் வகையில் அமைந்துள்ளதாகச் சாடிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அவற்றை நீக்காவிடில் வழக்குத் தொடரப் போவதாகவும் எச்சரித்தார்.
ஆங்காங்கே 'மெர்சல்' படம் ஓடிய திரையரங்குகளை முற்றுகையிட்டு பாஜக வினர் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவங் களும் இடம்பெற்றன. ஆனால், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் 'மெர்சல்' படத்துக்கு ஆதரவாகக் கருத்துரைத்துள் ளன. விரைவில் தனிக்கட்சி தொடங்கி அரசியல் களம் காணவிருப்பதாக அறி வித்துள்ள கமல்ஹாசனும் அப்படத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். இந்த நிலையில், "முக்கியப் பிரச்சி னையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மெர்சல் படக்குழுவினருக்குப் பாராட்டுகள்," என்று நடிகர் ரஜினிகாந்தும் 'மெர்சல்' ஆதரவுப் பட்டியலில் இணைந்து இருப்பது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக் கிறது. விரைவில் ரஜினி பாஜகவில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் 'மெர்சல்' விஷயத்தில் அக்கட் சிக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுத்திருப்பதை அரசியல் கவனிப்பாளர் களும் வியப்புடன் பார்க்கின்றனர்.