டெங்கி உயிரிழப்புகள் குறித்த தகவல்களை மறைக்கவே அபராதம் விதிக்கப்படுகிறது: முத்தரசன்

டெங்கி உயிரிழப்புகள் குறித்த தகவல்களை மறைக்கவே அபராதம் விதிக்கப்படுகிறது: முத்தரசன்

1 mins read
e4c04d4d-4988-4706-aeec-d27222b77785
-

சேலம்: டெங்கிக் காய்ச்சலால் பலர் உயிரிழப்பது குறித்த தகவல்களை மறைப்பதற்காகவே தற் போது கொசுப்புழு உற்பத்தியாவ தாகக் கூறி வீடு, தனியார் நிறுவனத்தார் பலருக்கு அபராதம் விதிக்கப்படுவ தாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார். டெங்கி இறப்பு மற்றும் பாதிப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் வலியுறுத்தி னார். "மத்திய, மாநில அரசுகள் டெங்கி உயிரிழப்பை மூடிமறைக் கும் செயலைக் கைவிட வேண் டும். தமிழகத்திற்கு மத்தியக் குழு வந்தது, வெறும் கண்துடைப்பு நாடகம்தான்.

"அதிமுக அரசு மீது மக்கள், எம்எல்ஏக்கள் நம் பிக்கை இழந்து விட்டனர். ஆளும் கட்சியினர் ஊழலில் முதலிடம் பிடித்து விட்டனர்," என்றார் முத்தரசன். நடப்பு அதிமுக அரசானது பாஜகவின் பினாமி ஆட்சியாக செயல்படுகிறது என விமர்சித்த அவர், அதிமுக ஆட்சி தொடர் வது மக்களுக்கும் தமிழக வளர்ச்சிக்கும் நல்லதல்ல என்றும் நடப்பு ஆட்சி அகற்றப்பட வேண் டும் என்றும் கூறினார். ராஜீவ் காந்தி கொலை வழக் கில் தண்டனை பெற்ற பேரறிவா ளன் உள்பட அனைவரையும் மனிதாபிமான முறையில் நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.