சீனாவில் தயாரிக்கப்பட்ட இஞ்சின்களைப் பயன்படுத்தி அமைச்சர் ஒருவரின் உறவினர் சிலர் மீன் பிடிப்பதற்கு காசிமேடு பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து மீனவளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த மீனவர்கள் நேற்று காசிமேடு துறைமுகம் அருகே மறியலில் ஈடுபட்டனர். அவர்களைக் கலைந்து செல்ல போலிசார் வலியுறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் அவர்கள் மீது போலிஸ் தடியடி நடத்தியது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஒரு சிறுவனை போலிசார் இழுத்துச் சென்றனர். தடியடிக்குப் பயந்து சிதறி ஓடிய மீனவர்களில் சிலர் அரசுப் பேருந்தின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. படம்: சதீஷ்
சீன படகு இஞ்சின்களுக்கு எதிராக மீனவர்கள் திடீர் போராட்டம்
1 mins read
-

