இந்தியாவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன்

இந்தியாவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன்

1 mins read
8d3edb50-b500-4931-9ccb-00f4e9738412
-

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டில்லர்சனை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வர வேற்றார். பின்னர் பேசிய சுஷ்மா, "பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் பாதுகாப்பாக உள்ளனர் என்பதற் கும் பயங்கரவாதத்தை பாகிஸ் தான் ஆதரிக்கிறது என்பதற்கும் அண்மையில் ஆப்கனில் நடத்தப் பட்ட தாக்குதலே மிகப்பெரிய சான்று," என்று குறிப்பிட்டார். "பிரதமர் மோடியின் அமெ ரிக்கப் பயணத்திற்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு உள்ளிட்ட உறவுகள் வலுவடைந்துள்ளது," என்றும் அவர் சொன்னார். இந்தியா-அமெரிக்கா-ஆப் கானிஸ்தான் பங்கேற்கும் முத் தரப்பு சந்திப்பு வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் அமெரிக் காவில் இந்தியர்களுக்கு வழங்கப்படும் 'எச்1பி' விசா குறித்தும் பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டது என்று சுஷ்மா சுவராஜ் கூறினார். பின்னர் பேசிய ரெக்ஸ் டில் லர்சன், "பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் அமெரிக் காவும் பக்கபலமாக உள்ளன," என்றார். பாகிஸ்தானில் பல பயங்கரவாத அமைப்புகள் கண் டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டில்லர்சனை வரவேற்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ். படம்: ஏஎஃப்பி