எம்எல்ஏ நெஞ்சில் கை வைத்துத் தள்ளிய பாதுகாப்புப் படையினர்

எம்எல்ஏ நெஞ்சில் கை வைத்துத் தள்ளிய பாதுகாப்புப் படையினர்

1 mins read

காஞ்சிபுரம்: அரசு விழாவின் போது ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனியை பாதுகாப்புப் படையினர் நெஞ்சில் கை வைத்து தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம், வல்லம் பகுதியில் அரசு விழா நடந்தது. விழா முடிந்ததும், முதல்வர் சிற்றுண்டி சாப்பிட ஓர் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. முதல்வரும் அதிகாரிகளும் அந்த அறைக்குள் சென்றபோது, எம்எல்ஏ பழனி யும் உடன் வந்தார். அப்போது, அவர் யார் என்பதை அறியாத பாதுகாப்புப் படையினர் 'இங்கிருந்து செல்லுங்கள்' என்று கூறி யபடியே அவரை நெஞ்சில் கை வைத்துத் தள்ளினர். இச்சமயம் அமைச்சர் ஒருவரது உதவியாளர் வேகமாக வந்து, 'பழனி ஒரு எம்எல்ஏ' என்று கூறி அவரை உள்ளே அழைத்துச் சென்றார்.