ஜனநாயகத்துக்கு ஆபத்து: முத்தரசன் கவலை

ஜனநாயகத்துக்கு ஆபத்து: முத்தரசன் கவலை

1 mins read

புதுக்கோட்டை: சுதந்திரமாக செயல்பட்டு வந்த தேர்தல் ஆணை யம் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட கூடியதாக மாறிவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் தெரி வித்துள்ளார். இத்தகைய போக்கானது ஜன நாயகத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து என புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குறிப்பிட்டார். பணம் பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக் காமல் ஆர்.கே. நகரில் இடைத் தேர்தல் நடத்த கூடாது என்று வலியுறுத்திய அவர், இதையும் மீறி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட் டால், மதவாத எதிர்ப்புக் கட்சி களோடு கூட்டணி அமைத்து இந் திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டி யிடும் என அறிவித்தார்.

"ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை நடத்தும் ஆணையம் முறையாக விசாரணை நடத்த வே ண்டும். பிரதமர், ஆளுநர், தற்போ தைய துணை அதிபர், லண்டன், சிங்கப்பூர் மற்றும் எய்ம்ஸ் மருத் துவமனை மருத்துவர்களை முத லில் விசாரிக்க வேண்டும். ஆனால் விசாரணை ஆணையத் தால் இதைச் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறிதான்," என்றார் முத்தரசன். நடப்பு அதிமுக அரசு அறவே செயல்படாத அரசாக உள்ளது என்று விமர்சித்த அவர், அரசுக்கு எதிராக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தும் பயணம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றார்.