சென்னை: தமிழகத்தில் உயிரு டன் இருப்பவர்களுக்கு 'கட் அவுட்', பதாகைகள் வைக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள் ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், பதாகைகள், கட் அவுட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். "அரசியல் கட்சிகள் அமைக் கும் கட்-அவுட்களால் மக்களுக்கு இடையூறு மட்டுமே ஏற்படும் நிலை யில், நடிகர்களுக்காக அமைக்கப் படும் கட்-அவுட்களுக்குப் பால பிஷேகம் செய்யும்போது, அப்பாவி ரசிகர்கள் தவறி விழுந்து இறக்கும் நிகழ்வுகளும், காயமடையும் நிகழ் வுகளும் நடப்பது மிகவும் துர திருஷ்டவசமானதாகும். "இந்த அபத்தங்களுக்கும், கொடுமைகளுக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பு முடிவு கட்டும். எனவே அத் தீர்ப்பை எத்தனை முறை வேண்டு மானாலும் வரவேற்று பாராட்டலாம்," என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பதாகைக்குத் தடை: தீர்ப்பை வரவேற்கும் ராமதாஸ்
1 mins read

