புதுடெல்லி: சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தம்பதிகள் மீது ஆக்ரா அருகே நால்வர் கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த தம்பதிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஞாயிறன்று பதேபூர் சிக்ரியில் இளம் தம்பதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து உத்தரப்பிரதேச அரசிடம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம் கேட்டுள்ளார். தலைநகர் டெல்லி அருகே உள்ளது ஆக்ரா. உலக அதிசயங் களில் ஒன்றான தாஜ்மகால் இங்குள்ளதால் லட்சக்கணக் கான சுற்றுப் பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கம். இந்த தாஜ் மஹாலை சுற்றிப் பார்த்த மறுநாள் இந்த தம்பதிகளை நால்வர் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரயில் தண்டவாளத்தின் ஓர மாக நடந்து சென்ற இந்த தம்பதிகளை ஒரு கும்பல் உறுப் பினர்கள் குச்சிகளாலும் கற்க ளாலும் தாக்கி உள்ளனர். குவென்டின் ஜெரிமி கிளர்க் என்ற ஆடவரின் மூளைப் பகுதி யில் ரத்தக் கட்டி இருப்பதாலும் மண்டை ஓடு உடைந்துள்ளதாலும் டெல்லியின் அப்போலோ மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பதேபூர் சிக்ரி என்ற பகுதியில் ஒரு கும்பல் உறுப்பினர்களால் குச்சி, கற்களால் தாக்கப்பட்ட சுவிட்சர்லாந்து தம்பதிகள் சிகிச்சை பெறுகின்றனர். படம்: ஊடகம்