வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று சிறைத் தண்டனை அனுபவித்துவரும் முருகன், மகள் திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். வேலூர் மத்திய சிறையில் முருகனும் அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு முருகன் அறையிலிருந்து கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் வேலூர் மாவட்ட நீதிபதி முன்பு அவர் முன்னிலைப் படுத்தப்பட்டார். ஆனால் வழக்கு அடுத்த மாதம் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பேசிய முருகன், "எனது மகள் திருமணத்தை நான் நடத்தாமல் வேறு யார் நடத்துவார்கள். அதற்காக நளினி 'பரோல்' கேட்டுள்ளார். முதலில் அவர் வெளியே சென்று திருமண ஏற்பாடுகளைச் செய்யட்டும். அதன்பிறகு எனக்கும் பரோல் கிடைக்கும்," என்று நம்பிக்கையோடு கூறினார்.
மகள் திருமணத்திற்கு 'பரோல்' கிடைக்கும்: முருகன்
1 mins read
-

