முதல்வர் விழாவில் பதாகைகள்; அகற்ற நீதிபதிகள் உத்தரவு

முதல்வர் விழாவில் பதாகைகள்; அகற்ற நீதிபதிகள் உத்தரவு

1 mins read
3f49943e-2307-4aa8-8c65-139b6bb47a5f
-

சென்னை: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்ற விழாவில் பிரம்மாண்டமான பதாகைகள் அனுமதியின்றி வைக்கப்பட்டதற்கு நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றனர். இந்தப் பதாகைகளை அகற்றி வரும் திங்கட்கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். திருச்சி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில்தான் மிகப்பெரிய அளவில் முதல்வர், துணை முதல்வர் உருவம் பதிக்கப்பட்ட பதாகைகள் வைக்கப்பட்டன. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் பங்கேற்றனர். பொதுமக்களுக்கும் போக்கு வரத்துக்கும் இடையூறாக இத்தகைய உயரமான பதாகைகள் இடம்பெற்றது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

முன்னதாக பொதுமக்களுக்கு இடையூறாக பதாகைகள் இருப் பதாக 'டிராபிக்' ராமசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத் திருந்தார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பெயரில் அமைக்கப்படும் பதாகை களால் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது என்றும் உடனடியாக பதாகைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறார்கள் என்றும் தமது மனுவில் 'டிராபிக்' ராமசாமி குறிப்பிட்டிருந்தார்.