சகாயம் அறிக்கையை முழுமையாக ஏற்க தமிழக அரசு மறுப்பு

சகாயம் அறிக்கையை முழுமையாக ஏற்க தமிழக அரசு மறுப்பு

2 mins read
02334236-0454-4237-a384-139d0ed3b9a3
-

சென்னை: கிரானைட் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருப் பது சமூக ஆர்வலர்களை அதிர்ச் சிக்குள்ளாக்கி இருக்கிறது. மேலும் இந்த முறைகேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தாக்கல் செய்த அறிக்கையை முழுமையாக ஏற்க முடியாது எனவும் தமிழக அரசு கூறியுள்ளது. மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கிரானைட் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதல் கிரானைட் எடுக்கப்பட்டதாகவும், இதனால் அரசுக்குப் பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்ட தாகவும் புகார் எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை குழுவை அமைத்தது உயர்நீதிமன்றம். இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட சகாயம், அதன் முடிவில் அரசுக்கு இறுதி அறிக் கையை அளித்தார். கிரானைட் முறைகேடு காரண மாக அரசுக்கு ஏறத்தாழ ரூ.1,10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனப் பரிந்துரை செய்வ தாகவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் தமிழக அரசு சார்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

அதில், ஐஏஎஸ் அதி காரி சகாயம், அரசுக்கு 212 பரிந் துரைகளை கொடுத்துள்ளார் என் றும் அவற்றுள் 131 பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. "சகாயத்தின் 81 பரிந்துரைக ளுக்கு உரிய முகாந்திரம் இல்லா ததால் அவற்றை அரசு நிராகரித் துள்ளது. அவரது அறிக்கையில் துறை அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படவில்லை. எனவே, அதிகாரிகள் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாத நிலையில் இந்த கிரானைட் முறை கேடு விஷயத்தில் மேல் விசா ரணையாக, சிபிஐ விசாரணை நடத்தத் தேவையில்லை," என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.