லக்னோ: இஸ்லாமாபாத் என் னும் கிராமம் உத்தரப் பிர தேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த சந்திர பிரகாஷ் என்பவரது மகள், விகாஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். காதலியிடம் நினைத்த நேரத்தில் பேச வேண்டும் என்பதற்காக விகாஸ் அந்தப் பெண்ணுக்கு புதிய கைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்து உள்ளார். இதற்கிடையே, விகாஸும் அவரது உறவினர்களும் அந்தப் பெண்ணின் வீட் டுக்குச் சென்றுள்ளனர். அவர் களது வருகையை அறிந்த அந்தப் பெண்ணின் குடும்பத் தினர் விகாஸ் மற்றும் அவரது உறவினர்களுக்கு செருப்பு மாலை அணிவித்தனர். அத்துடன், அவர்கள் அனை வரையும் அடித்து தாக்கினர். இதுதொடர்பான காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங் களில் பரவிவருகிறது. இதுகுறித்து விகாஸின் சகோதரர் குமார் போலிசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சந்திர பிரகாஷ் உள்பட 6 பேர் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலிக்கு கைபேசி; காதலனுக்கு செருப்பு மாலை
1 mins read
-

