புதுடெல்லி: மலேசியாவில் கடவுச் சீட்டுகளைத் தெலைத்துவிட்டு விமான நிலையத்தில் சிக்கிக் கெண்ட இந்திய குடும்பத்துக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டி யுள்ளார் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். இந்தியாவைச் சேர்ந்த மீரா ரமேஷ் படேல் என்பவர் டுவிட்டரில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு நேற்று முன்தினம் ஒரு வேண்டு கேள் விடுத்தார். அதில், "எனது குடும்பத்தினர் பாஸ்பேர்ட்டு (கடவுச்சீட்டு)களைத் தெலைத்து விட்டு மலேசிய விமான நிலை யத்தில் தவிக்கின்றனர். வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு) என்பதால் மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகமும் மூடப்பட்டுள் ளது. அன்புகூர்ந்து உதவி செய் யுங்கள்," என்று மீரா ரமேஷ் படேல் கூறியிருந்தார்.
அதைக் கவனித்த அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடனடியாக டுவிட் டரில் பதிலளித்தார். "மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் கவனத்திற்கு: இது மிகவும் அவ சரமான விஷயம். தயவுசெய்து தூதரகத்தைத் திறந்து, இந்திய குடும்பத்துக்கு உடனடியாக உதவி செய்யுங்கள்," என்று அவர் பதி விட்டிருந்தார். இந்தியத் தூதரகமும் மின்னல் வேகத்தில் டுவிட்டரில் பதிலளித் தது. அதில், "இந்திய குடும்பத்தி னரைத் தெடர்புகெண்டு பேசி வருகிறேம். தேவையான உதவி கள் செய்யப்பட்டு வருகின்றன," என்று தூதரகம் தெரிவித்தது.

