மும்பை: மும்பையில் சனிக்கிழமை நிகழ்ந்த இளைஞர் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் (படம்) கலந்துகொண்டார். அங்கு அவர் பேசுகையில், "பண மதிப்பிழப்பு என்பது மனிதனால் உருவாக்கப் பட்ட பேரழிவு. இது 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியைக் காட்டிலும் பேரழிவை ஏற்படுத்தி விட்டது. "மத்திய அரசின் இந்த நட வடிக்கையானது மிகப்பெரிய மோசடியாகும். இவ்விவகாரத்தில் யாரேனும் விசாரணை நடத்தினால் உண்மை என்ன என்பது தெரிய வரும்.
"உயர் மதிப்பு ரூபாய் நோட்டு களைத் தடை செய்தது தவறு என்பதை நேர்மையாக ஏற்றுக் கொள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மறுக்கிறது. ஜிஎஸ்டியிலும் தலைமைப் பொரு ளாதார ஆலோசகரின் ஆலோச னையை ஏற்க மறுத்து தன்னிச் சையாகவே செயல்பட்டது. வரும் 2019ஆம் ஆண்டு மத்தியில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். அப்போது பொறுப்பேற்கும் புதிய அரசு ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு விவகாரங்களில் புதிய மாற்றங்களைக் கொண்டு வரும்," என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.
முன்னதாக, ராஜ்கோட்டில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பேசிய ப.சிதம்பரம், ‚"பணமதிப்பு நீக்க நடவடிக்கை படுதோல்வி அடைந்த ஒன்று. ரயில்கள் ஏன் தடம்புரள்கின்றன என்று ரயில்வே அமைச்சருக்குத் தெரியாது. அதே போல பொருளாதாரம் ஏன் கவிழ்ந்து விட்டது என்று அரசுக்குத் தெரிய வில்லை. நான் நிதியமைச்சராக இருந்தபோது பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக பிரதமர் என்னிடம் சொல்லி இருந் தால், நான் வேண்டாம் என்பேன். அவர் ஏற்கவில்லை என்றால் எனது பதவியை ராஜினாமா செய்திருப் பேன்," என்றார். அதிகபட்ச ஜிஎஸ்டியை 18 விழுக்காடாகக் குறைக்கவேண்டும் என்றும் ஜிஎஸ்டியை மத்திய அரசு அவசர அவசரமாக அமலாக்கிவிட் டது என்றும் சிதம்பரம் கூறினார்.

