பிரதமரின் பெயர் தெரியாத அதிமுக அமைச்சர்

பிரதமரின் பெயர் தெரியாத அதிமுக அமைச்சர்

1 mins read
03ec1fd8-1aa4-4e37-9c2d-e5f85c909d17
-

திண்டுக்கல்: டெங்கிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனி வாசன் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, "துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து டெங்கி தொடர்பாக ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்து வர்களை வரவழைத்தார்," என உளறிக் கொட்டினார். இந்தியா வின் பிரதமர் நரேந்திர மோடி என்று சொல்வதற்குப் பதில் மன்மோகன் சிங் என்று அமைச் சர் ஒருவரே அறியாமையில் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. திண்டுக்கல் சீனிவாசனை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.