சசிகலாவுடன்தான் எங்களுக்கு போட்டி: தெளிவுபடுத்தும் முனுசாமி

சசிகலாவுடன்தான் எங்களுக்கு போட்டி: தெளிவுபடுத்தும் முனுசாமி

1 mins read

புதுடெல்லி: அதிமுக சின்னம் தொடர்பான வழக்கை பொறுத்தவரை ஓபிஎஸ் மற்றும் சசிகலா என இரண்டு அணிகள்தான் களத்தில் உள்ளன என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடியும், பன்னீர்செல்வமும் இணைந்துவிட்டதால், சின்னம் தொடர்பான வழக்கில் தினகரனுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை எனச் சுட்டிக்காட்டினார். "சசிகலாவுக்கும் எங்களுக்கும் இடையேதான் போட்டி. தினகரன் எங்களுக்குப் போட்டியாளர் இல்லை. எங்களுக்குதான் சின்னம் கிடைக்கும்," என்றார் முனுசாமி. இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக அழிய வேண்டும் என்ற நோக்கில் டிடிவி தினகரன் தரப்பு செயல்படுவதாகச் சாடினார்.