வசூல் ராஜா எம்பிபிஎஸ் பட பாணியில் ஐஏஎஸ் தேர்வில் முறைகேடு

வசூல் ராஜா எம்பிபிஎஸ் பட பாணியில் ஐஏஎஸ் தேர்வில் முறைகேடு

1 mins read
d4384ea6-ac52-4449-82e9-33d7eddc846c
-

குற்றம் இழைத்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய போலிஸ் பணிக்குப் பயிற்சி பெறும் ஒரு வரே குற்றத்தில் ஈடுபட்ட சம்பவம் சென்னையில் நிகழ்ந்து உள்ளது. சஃபீர் கரிம் என்னும் ஐபிஎஸ் அதிகாரி திருநெல்வேலி மாவட் டம் நாங்குநேரியில் துணை கண் காணிப்பாளராகப் பயிற்சி பெற்று வருகிறார். ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டதால் யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பித்தார். அந்தத் தேர்வு சென்னை எழும்பூரில் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. தேர்வெழுத வந்த கரிம் தம்முடன் கைபேசி, சட்டைப் பொத்தானில் பொருத்திக் கொள் ளும் வகையிலான புளுடூத்துடன் இணைக்கப்படக்கூடிய சின்னஞ் சிறு கேமரா, கம்பி இணைப்பற்ற காதுநுழைக் கருவி போன்றவற் றையும் எடுத்துச் சென்றார்.

கரிமின் மனைவி ஜாய்ஸி ஜாய் என்பவர் வினாக்களுக்கான விடைகளை ஹைதராபாத்தில் இருந்து கைபேசி வழியாகச் சொல்லிக் கொடுத்ததாக புலன் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கமல்ஹாசன் நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ் பட பாணியில் புளுடூத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கரிம் முறைகேடு செய்ததாகக் கூறப்பட்டது. தேர்வில் முறைகேடு நடப்பது தெரிய வந்ததும் உடனடியாக போலிசார் நடவடிக்கையில் இறங் கினர். கரிம் சென்னையிலும் அவரது மனைவி ஹைதராபாத்திலும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சஃபீர் கரிம். ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார் இவர். படம்: தமிழக ஊடகம்