உயரப் பறந்த விமானத்தின் கதவு கழன்று வீட்டின் மீது விழுந்தது; விமானிகள் தப்பினர்

உயரப் பறந்த விமானத்தின் கதவு கழன்று வீட்டின் மீது விழுந்தது; விமானிகள் தப்பினர்

1 mins read
a59b6b57-4579-4cd2-806f-f235fdae8dde
-

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் கதவு ஒன்று திடீரென்று கழன்று விழுந்தால் எப்படி இருக்கும்-? ஆனால் அச்சம்பவம் உண்மை யாகவே நிகழ்ந்துள்ளது. தெலுங் கானா மாநில விமானப் போக்கு வரத்து பயிற்சிக் கழகத்துக்குச் சொந்தமான சிறிய விமானத்தின் கதவு ஒன்று கழன்று கீழே வீடு ஒன்றின் மீது விழுந்துவிட்டது. செகந்திராபாத் மாவட்டம் லால் குடா நகர் அருகே யாதவ் பாஸ்டி என்னும் இடத்தில் உள்ள அந்த வீட்டின் கூரை மீது நேற்று முன் தினம் நண்பகலில் விமானக் கதவு விழுந்தபோதிலும் யாருக் கும் காயம் இல்லை. அத்துடன், விமானிகள் இரு வரும் பத்திரமாக தரை இறங்கி விட்டனர்.

மூன்று அடி உயரமும் நான்கு அடி அகலமும் உள்ள அந்தக் கதவின் எடை 20 கிலோ. வீட்டினுள் இருந்த கணேஷ் யாதவ் என்பவர் பெரியதொரு சத்தம் கேட்டதாகவும் எரிவாயு சிலிண்டர் வெடித்துவிட்டதாகத் தாம் கருதியதாகவும் சொன்னார். பின்னர்தான் அது விமானக் கதவு என்று தெரிய வந்ததாகவும் ஊடகங்களிடம் அவர் கூறினார். போலிசாரும் அச்சம்பவத்தை உறுதிப்படுத்தினர். 'டைமண்ட் டிஏ 42' என்னும் அந்தச் சிறிய விமானம் ஆஸ்திரிய நாட்டில் தயாரிக்கப்பட்டது. வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீர் என்று கதவு கழன்று விழுந்ததற்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.