சென்னை: தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கிய வேகத்திலேயே தீவிரமடைந்துள் ளது. நேற்று முன்தினம் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி களுக்கு நேற்று விடுமுறை அளிக் கப்பட்டது. இதற்கிடையே வங்கக் கடலில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாகவும் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை, காஞ்சி-புரம், திருவள் ளூர், கடலூர், தஞ்சை, நாகை, ஆகிய கடலோர மாவட்டங்களில் அடுத்த 5 தினங்களுக்கு கன மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்ச ரிக்கை விடுத்துள்ளது. மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் 21 இடங் களில் கனமழையும் 16 இடங்களில் மிகக் கனமழையும் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித் துள்ளார். இலங்கை அருகே நிலை கொண்டுள்ள வளிமண்டல மேல டுக்குச் சுழற்சி மேற்கில் நகர்ந்து மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளதாகவும் இத னால் மழை நீடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விடிய விடிய பெய்த மழையால் சென்னை சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. படம்: சதீஷ்

