இந்தியக் கடற்படைக்கு 111 ஹெலிகாப்டர்

இந்தியக் கடற்படைக்கு 111 ஹெலிகாப்டர்

1 mins read

புதுடெல்லி: மத்திய பாதுகாப்பு அமைச்சு இந்தியக் கடற்படைக்கு ரூ. 21,738 கோடி மதிப்பில் 111 ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது என அரசு தரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளது. பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது தொடர்பான மன்றக் கூட்டம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. முதல்கட்டமாக 16 ஹெலிகாப் டர்கள் உடனடியாக பயன்படுத் தும் நிலையில் வாங்கப்படும் எனவும் 95 ஹெலிகாப்டர்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் எனவும் அமைச்சின் தகவல் தெரிவிக்கிறது. இதற்காக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன் கூட்டு ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது.