புதுடெல்லி: அரசாங்க அலுவலகங் களில் தங்களது வேலைகளை முடிக்க சுமார் 50 விழுக்காட்டு இந்தியர்கள் லஞ்சம் கொடுத்தது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 'லோக்கல் சர்க்கிள்' என்ற நிறுவனம் 200 நகரங்களில் ஆய்வு ஒன்றை மேற் கொண்டது. தற்போது வெளியான அந்த ஆய்வின் முடிவில், 10க்கு எட்டு பேர் சொத்து பத்திரப் பதிவு, வாட் வரி, போன்றவைக் காக போலிஸ், மாநகராட்சி அதி காரிகளுக்கு லஞ்சம் கொடுத் ததாகக் கூறியுள்ளனர். அதில், 25 விழுக்காட்டினர் பல முறையும் 20 விழுக்காட்டினர் ஒன்று அல்லது இரண்டு முறை லஞ்சம் கொடுத்ததாகக் கூறியுள்ளனர்.
84 விழுக்காட்டினர் உள்ளூர் நிர்வாகத்திற்கு லஞ்சம் கொடுத்து உள்ளனர். பிஎஃப், வருமான வரி, சேவை வரி, ரயில்வே மற்றும் ஏலம் எடுப் பது தொடர்பான பணிகளுக்காக 9 விழுக்காட்டினர் லஞ்சம் கொடுத்து உள்ளனர். வேலை செய்ய லஞ்சம் கொடுப் பதைத் தவிர வேறு வழியில்லை என மூன்றில் ஒருவரும் 2 விழுக் காடு பேர் லஞ்சம் கொடுப்பதால் வேலை விரைவாக நடப்பதாகக் கூறியுள்ளனர். ஆய்வில் கலந்து கொண்ட 50 விழுக்காட்டினர் ஊழலை ஒழிக்க மாநில அல்லது மாவட்ட நிர்வாகங் கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியுள்ளனர். 42 விழுக்காட்டினர், ஊழலை ஒழிக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, ஆனால் அது பலனளிக்கவில்லை என்று கூறிய தாக அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

