வடகிழக்கு பருவமழை தீவிரம், ஐவர் மரணம்; தமிழ்நாட்டில் 2015 திரும்புமோ என அச்சம்

வடகிழக்கு பருவமழை தீவிரம், ஐவர் மரணம்; தமிழ்நாட்டில் 2015 திரும்புமோ என அச்சம்

1 mins read
626ef5d6-cd18-4b9b-aac8-5533bc5b2077
-

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடர்கிறது. பள்ளிக்கூடங்கள் பல மாவட் டங்களில் நேற்றும் மூடியிருந் தன. அடுத்த 48 மணி நேரத் திற்கு பேய்மழை தொடரும் என்று வானிலை மையம் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு விடுத்ததையடுத்து மாநில மக் களிடையே, குறிப்பாக தலை நகர் சென்னை மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தைப் போன்ற நிலைமை சென்னைக்கு வந்து விடக்கூடும் என்று பலரும் கவலையோடு இருப்பதைக் காண முடிந்தது. சென்னையை மூழ்கடித்த 2015 வெள்ளத்தில் மாநிலத்தில் மொத்தம் 150 பேர் மரணமடைந்தனர். இதனிடையே, மாநிலத்தில் இதுவரையில் மழை, வெள்ளம் காரணமாக மாண்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாக நேற்று அதிகரித்தது. இதற்கிடையே, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளைவிட தமிழ்நாடு வெள்ள நிலவரத்தைச் சிறந்தமுறை யில் சமாளித்து வருவதாக தமிழ் நாட்டின் மாநகர் நிர்வாக அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்தார்.

சென்னையில் பெய்த கடின மழையால் வீதிகளில் தேங்கிய வெள்ளம். படம்: சதீஷ்