அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

1 mins read

சென்னை: அரசு நிர்வாகத்தை உயர் நீதிமன்றம் ஏற்று நடத்த முடியாது என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழக்கு ஒன்றில் கோபத்துடன் கூறியுள்ளார். மழை வெள்ள பாதிப்புகளைத் தடுக்க அரசு எடுத்துள்ள நட வடிக்கைகள் போதாது என்ற அவர், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள் ளார். "வெள்ள பாதிப்புகளைத் தடுக்கக் குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்களை முறையாக வகுத்து செயல்படுத்த அவர் அறி வுறுத்தியுள்ளார். சென்னையில் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதையும் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். மழை வெள்ள தடுப்புக் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியும் வெள்ளத் தடுப்புக் குறித்த அறிக் கையை அளிக்க உத்தரவிடப் பட்டது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட விவரம், மழை நீர் கால்வாய் பராமரிப்பு உள்ளிட் டவை குறித்தும் அறிக்கை தர நீதிபதி உத்தரவிட்டார். சென்னையில் மழையால் ஏற் பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நேற்று உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. வழக்கறிஞர் சூர்யபிரகாசம் இந்த வழக்கைத் தொடுத்திருந்தார். "கடந்த 2015 டிசம்பர் மாதம் ஏற்பட்ட பேரிடர் வெள்ளத்திலிருந்து அரசு இன்னமும் பாடம் கற்க வில்லை," என்று தமது மனுவில் சூர்யபிரகாசம் குறிப்பிட்டுள்ளார். உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் நீர்நிலைகள் தூர்வாரப் படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.