காவல்துறை செயல்பாடு: கேள்வி எழுப்பும் திருமா

காவல்துறை செயல்பாடு: கேள்வி எழுப்பும் திருமா

1 mins read

கரூர்: தமிழகக் காவல்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அரசை இயக்குவது யார் என்பது தொடர்பில் பல்வேறு சான்றுகள் வெளிப்படுவதாகத் தெரிவித்தார். "கரூரில் பாஜகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த வந்ததாகக் கூறி விசிகவினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலிஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட உடன் தாக்குதல் நடத்தப்படுகி றது. இதைப் போலிசார் தடுக்கா மல் வேடிக்கை பார்த்துள்ளனர். "காவல்துறை அதிமுகவின் கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது பாஜக கட்டுப்பாட்டில் உள்ளதா?, தமிழகத்தில் ஆளும்கட்சி அதி முகவா; பாஜகவா?" என்றும் திரு மாவளவன் கேள்வி எழுப்பினார்.