சென்னை: கடந்த இரு தினங்க ளில் சென்னையில் மட்டும் வழக் கத்தைவிட இரு மடங்கு மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. மழை அளவு குறித்து வெள்ளிக் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அம்மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வழக்கத்தை விட இருமடங்காக அதாவது 62 செ.மீ. மழை பெய்துள்ளதாகக் கூறினார். மன்னார் வளைகுடா வளிமண் டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவு வதால் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாகக் குறிப் பிட்ட அவர், சனிக்கிழமை காலை தொடங்கி அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.
தனியார் வானிலை நிபுணர்கள் சிலரும் அடுத்த சில தினங்களில், குறிப்பாக வரும் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் சென்னையில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகக் கணித்துள்ளனர். எனவே மீண்டும் அப்படியொரு மழையை எதிர் பார்த்து சென்னை மாநகரவாசிகள் திகில் கலந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். "இலங்கைக்கு அருகே இருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, தற்போது தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடல், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி வரை நீடிக் கிறது. மன்னார் வளைகுடா பகுதி யில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. "இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் விட்டுவிட்டு மழை பெய்யும். ஒருசில வேளையில் கனத்த மழையும் பெய்யும். கட லோர மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனத்த மழை பெய்யும்," என்றார் பாலச்சந்திரன்.
சென்னை, மெரினா கடற்கரையிலும் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அங்கு தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வந்தவர்கள், மழை சற்றே ஓய்ந்ததும் வண்டிகளை தள்ளிச் சென்றனர். படம்: ஏஎஃப்பி

