நாளையும் நாளை மறுநாளும் சென்னையில் கனத்த மழை பெய்யும் என வானிலை நிபுணரும் 'தமிழ்நாடு வெதர்மேன்' என்று அழைக்கப்படுபவருமான பிரதீப் ஜான் கணித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையில் இன்னும் மழை ஓயவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், வரும் நாட்களில் நீலகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையைப் பேய் மழை புரட்டிப் போட்டபோது, பிரதீப் ஜான் வெளியிட்ட வானிலை கணிப்புகள் பலவும் உண்மையாகின. எனவே அவர் வெளியிடும் வானிலை அறிக்கைகளைப் பலரும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்றைய மழை அளவும் வெதர்மேன் கணித்தது போன்றே இருந்ததாகப் பலரும் தெரிவித்தனர்.
சென்னையில் உள்ள பெரும்பாலான குடிசைப் பகுதிகள் தற்போது வெள்ள நீரில் மிதக்கின்றன. படம்: ஏஎஃப்பி

