வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில் இந்தியாவின் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த 14 வயது மாணவர் சக மாணவரால் கடுமையாக தாக்கப் பட்டார். கடந்த வாரம் கெண்ட்ரிட்ஜ் பள்ளி வளாகத்தின் வெளியே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதில் அந்த இந்திய மாணவன் படுகாயமடைந்தான். இதுகுறித்து மாணவனின் தந்தை கொடுத்த புகாரில், தன் மகன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன் என்பதனாலேயே தாக்கப்பட்டான் எனக் கூறினார். இந்நிலையில், அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது நடந்த தாக்குதல் குறித்து விரைவில் விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்திய மாணவர் மீது தாக்குதல்; விளக்கம் கேட்கும் சுஷ்மா
1 mins read

