சென்னை வெள்ளம்: 12 பேர் மரணம், 50க்கு மேற்பட்ட விமானங்கள் தாமதம்

சென்னை வெள்ளம்: 12 பேர் மரணம், 50க்கு மேற்பட்ட விமானங்கள் தாமதம்

1 mins read

தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது சென்னை. கடந்த எட்டு நாட்களில் மழை, வெள்ளத்திற்கு 12 பேர் வரை பலியாகிவிட்டனர். நேற்று முன்தினம் மட்டும் சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் ஏழு பேர் மரணமடைந்தனர். இதற்கிடையே, கடும் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி சென்னை முழுவதும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வரு கிறது. அதன் காரணமாக விமானப் பயணிகளும் விமான ஊழியர்களும் நேரத்திற்கு விமான நிலையம் சென்று சேர இயல வில்லை.

அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் 52 விமானச் சேவை களில் தாமதம் ஏற்பட்டதாக ஊடகச் செய்திகள் குறிப்பிட்டன. அவற்றுள் 23 அனைத்துலக விமானச் சேவைகளும் அடங்கும். துபாய், சிங்கப்பூர், பாரிஸ் ஆகிய நகரங்களுக்குச் செல்ல வேண்டிய விமானங்கள் தாமத மாகக் கிளம்பியதாகத் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில், ஏற்கெனவே பயணச்சீட்டு வாங்கிய சென்னை பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்தாலோ பயணத்தை மாற்றி அமைத்தாலோ அதற்கு அபராதக் கட்டணம் விதிக்கப் போவதில்லை என ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.