சென்னை: அரசுப் பொது மருத்துவமனைக்கு விடுக்கப் பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சென்னையில் பரபரப்பு நிலவியது. நேற்று முன்தினம் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு வந்த கடிதம் ஒன் றில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. எழும்பூர் தபால் நிலையத் தில் இருந்து இந்தக் கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலிசார் தெரிவித்தனர். ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக் கானோர் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது.
வெடிகுண்டு மிரட்டலால் பெரும் பரபரப்பு
1 mins read

