ஈரோடு: திருச்செங்கோடு சிவன் கோவிலில் இருந்து சுமார் 1,200 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் 3 அங்குல உயரமுள்ள மரகத லிங்கம், ஒன்றரை அங்குல உயரமுள்ள மரகத நந்தி ஆகியவற்றை மர்ம நபர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருடிச் சென்றனர். இந்நிலையில், ரூ.7 கோடி மதிப்புள்ள இவற்றை ஈரோட்டில் விற்பதற்கு முயற்சி நடப்பதாக போலிசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மேட்டூர் தங்கு விடுதியில் அதிரடி சோதனை மேற்கொண்ட போலிசார், அங்கு தங்கியிருந்த சிலைக் கடத்தல்காரர்கள் 3 பேரை கைது செய்தனர். மரகத லிங்கமும், நந்தியும் மீட்கப்பட்டன.
ரூ.7 கோடி மதிப்புள்ள லிங்கம், நந்தி மீட்பு: விற்க முயன்ற மூவர் கைது
1 mins read

