சென்னையில் கனமழை பெய்து வந்ததால், பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் வருகை குறைந்து கோயம்பேடு சந்தையில் கடந்த ஒரு வாரமாக காய்கறி விற்பனை மந்தமாகவே இருந்தது. அத னால் காய்கறிகள் விலை குறைந்துள்ளன. இது தொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்க துணைத் தலைவர் பி.சுகுமார் கூறுகையில், மழை காரணமாக சில்லறை வியாபாரிகள் குறைந்த எண்ணிக்கையிலேயே சந்தைக்கு வந்ததாகத் தெரிவித்தார். தற்போது மழை ஓரளவு குறைந் திருப்பதால் வியாபாரம் சற்று சூடு பிடித்துள்ளது என்றும் அவர் கூறினார். படம்: தகவல் ஊடகம்
கோயம்பேட்டில் காய்கறி விற்பனை சரிவு
1 mins read
-

