சென்னை: நடிகர் கமல்ஹாசன் இப்போதுதான் அரசியலில் பாலர் பள்ளி பாடம் பயின்று வருகிறார் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கழகங்கள் இல்லாத தமிழகம், கவலைகள் இல்லாத தமிழகமாக உருவாகும் என்றார். கமல் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி தருவதாகவும் அவர் கூறினார். "திமுக தலைவரை பிரதமர் மோடி சந்தித்ததில் எந்தவிதமான அரசியல் உள்நோக்கமும் கிடையாது. உள்நோக்கம் கற்பிப்பதும் சரியல்ல. தமிழகத்தை மிக விரைவில் தாமரை ஆளப்போகிறது," என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.
பாடம் பயில்கிறார் நடிகர் கமல்ஹாசன்
1 mins read

