சென்னை: மத்திய அரசு சர்வாதிகாரப் போக்கில் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த ஓராண்டை நினைவுபடுத்திப் பார்த்தால் கசப்பானவை மட்டுமே நினைவுக்கு வருவதாகக் கூறினார். "இந்த நடவடிக்கையால் மத்திய அரசு நாணயம் இழந்துள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய பாஜக அரசு மூர்க்கத்தனமாக, சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுகிறது. "மத்திய அரசு எந்த சாதனையும் புரியவில்லை. அதனால்தான் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனை என்று ஏதும் குறிப்பிடாமல் சென்றுவிட்டார்," என்றார் தா.பாண்டியன்.
சர்வாதிகாரப் போக்கு: பாண்டியன் புகார்
1 mins read

