விமானப் பயணியை புரட்டி எடுத்த ஊழியர்கள் நீக்கம்

விமானப் பயணியை புரட்டி எடுத்த ஊழியர்கள் நீக்கம்

1 mins read
cb37f05e-4c65-4198-850d-4e11fa8a924d
-

டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானப் பயணி நடத்தப்பட்ட விதம் குறித்து விசாரிக்க விமானப் போக்கு வரத்து அமைச்சு உத்தரவிட் டுள்ளது. மேலும் இதன் தொடர்பில் விளக்கமளிக்கு மாறு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை விமானப் போக் குவரத்து அமைச்சர் கஜபதி ராஜு கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையிலிருந்து புது டெல்லி வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த ராஜிவ் கட்யால், 53, என்ப வரை மூன்று ஊழியர்கள் கடு மையாக நடத்திய சம்பவம் காணொளியாக நேற்று முன் தினம் பரவியது. அக்டோபர் 15ஆம் தேதி நடந்த அச்சம்பவத்தைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். விமானப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்தில் ஏறச் சென்ற கட்யாலை விமான ஊழியர்கள் பலவந்தமாகக் கீழே தள்ளி கழுத்தைப் பிடிப் பதும் அவர்களைப் பார்த்து கட்யால் சத்தம் போடுவதும் காணொளியில் பதிவாகியிருந் தது. ஆனால் எதற்காக அவர் கள் அவ்வாறு நடந்துகொண் டார்கள் என்ற விவரம் வெளி யாகவில்லை.

இண்டிகோ விமான ஊழியர்களிடம் சிக்கிய விமானப் பயணி. படம்: சமூக ஊடகம்