சென்னை: கடந்த பத்து தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் 1,379 ஏரிகளும் குளங்களும் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 14,098 ஏரிகள், குளங்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் தற்போது 1379 ஏரி, குளங்கள் நிரம்பி விட்டன. சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி, கொளத்தூர் ஆகிய 2 ஏரிகளும் நிரம்பி விட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 961 ஏரிகளில் 239ம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 593 ஏரிகளில் 217ம் நிரம்பியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 252 ஏரிகள் நிரம்பியுள்ளன. ஈரோடு, கரூர், மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு ஏரி கூட நிரம்பவில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பத்து நாள் மழை: 1,379 ஏரிகள், குளங்கள் நிரம்பியதாகத் தகவல்
1 mins read

