கறுப்புச் சட்டையுடன் திமுக ஆர்ப்பாட்டம்

கறுப்புச் சட்டையுடன் திமுக ஆர்ப்பாட்டம்

1 mins read
b70ec4b8-2d69-40b6-aadb-40c38a5958b3
-

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியை எதிர்த்து மதுரையில் திமுக சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கறுப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர். திமுக மகளிரணியினர் கறுப்புப் படவை அணிந்திருந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், "பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இரவு நேரத்தில் அறிவிக்கப்பட்டது," என்றார். "நள்ளிரவு நேரத்தில்தான் நம் நாடு சுதந்திரம் பெற்றது. அதே இரவு நேரத்தில்தான் நாம் சுதந்திரத்தை இழந்தோம்," என்றார் ஸ்டாலின். படம்: சதீஷ்