வழக்கறிஞர்களின் படிப்புத் தகுதிகளை சோதித்து அறிய நீதிபதி உத்தரவு

வழக்கறிஞர்களின் படிப்புத் தகுதிகளை சோதித்து அறிய நீதிபதி உத்தரவு

1 mins read

சென்னை: 'லெட்டர் பேட்' கல்லூரிகளில் பணம் கொடுத்து சட்டப்படிப்பை விலைக்கு வாங்கிவிடுவதாகவும் வழக் கறிஞர்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. வழக்கறிஞர்களின் தகுதி தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் அமர்வின் முன் னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி வழங்கிய தீர்ப்பில் சில உத்தர வுகளைப் பிறப்பித்தார். "தமிழக வழக்கறிஞர்களின் பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றி தழ்களை உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும். 'லெட்டர் பேட்' கல்லூரிகளில் காசு கொடுத்து சட்டப்படிப்பை விலைக்கு வாங்குகின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கும் இத்தகைய கல்லூரி கள் மீது பார் கவுன்சில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். "போலி வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுத்த பின்னரே பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும்," என நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வழக்குத் தொடுத் துள்ளவர்களுக்கு ஆயுதம் ஏந்திய போலிஸ் பாதுகாப்பு வழங்கவும் அவர் உத்தரவிட்டார். அதிகாரிகள் விரைந்து சென்று பிடித்துச் சென்றனர். செந்தில் குமாருக்கு சசிகலா பணப் பரி மாற்றம் தொடர்பான பல ரகசியங் கள் தெரியும் என்பதால் அவரை சாட்சியாக வைத்து பல முக்கிய தகவல்களைப் பெற மத்திய அரசு வட்டாரங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.