சசிகலா பண ரகசியங்களை அறிந்த வழக்கறிஞர் சிக்கினார்

சசிகலா பண ரகசியங்களை அறிந்த வழக்கறிஞர் சிக்கினார்

1 mins read

புதுடெல்லி: சசிகலா குடும்பத்தா ரின் பணப் பரிமாற்ற நிகழ்வுகளை முன்னின்று நடத்தி வந்தவர் வழக் கறிஞர் செந்தில்குமார். வருமான வரித் துறையின் வளையத்தில் அவரும் முக்கிய நபராக இருந்தார். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது செந்தில்குமார்தான் போயஸ் தோட்டத்துக்குள் சென்று சொத்துக்குவிப்பு வழக்கு தொடர் பாக நேரடியாக விவாதித்து வந்தார். அத்துடன் பெங்களூரிலுள்ள சில நீதிபதிகள், நீதித்துறை, வருமான வரித்துறை மற்றும் போலிஸ் அதிகாரிகள் ஆகியோ ருடன் ஆலோசித்ததாகவும் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவையும் மற்ற வர்களையும் விடுவிக்கும் பணி யில் அவர் ஈடுபட்டதாகவும் கூறப் பட்டது. இது தவிர, சசிகலா குடும்பத் தினரின் பணப் பரிமாற்ற தகவல் கள் பலவற்றையும் அவர் அறிந்தி ருந்தார்.

போயஸ் தோட்டத்தில் செல் வாக்கு மிக்கவராக வலம்வந்த செந்தில்குமாருக்கு, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா தண் டனை பெற்றபின் அனுமதி மறுக் கப்பட்டது. இதனால், அவர்களிடமிருந்து ஒதுங்கியிருந்த செந்தில்குமாருக்கு சசிகலா தரப்பில் இருந்து மிரட் டல்கள் வரத்தொடங்கியதாக தமி ழகத்தின் பிரபல நாளேடு குறிப் பிட்டுள்ளது. இதையடுத்து, தமிழ கத்தில் இருப்பதைத் தவிர்த்த அவர் டெல்லியில் முகாமிட்டு வந்ததாகவும் அச்செய்தி கூறியது.