தனித் தனி அரசியல் பயணம்; தீவிரம் காட்டும் கமல், ரஜினி

தனித் தனி அரசியல் பயணம்; தீவிரம் காட்டும் கமல், ரஜினி

1 mins read

சென்னை: அரசியல் கட்சி தொடங்குவதற்கான வேலை களில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் நடிகர் கமல்ஹாசன் நேற்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்திக்கப் போவதாகத் தகவல்கள் வெளி யாயின. அதற்காக நேற்றுக் காலை அவர் விமானம் மூலம் கோல் கத்தா சென்றார். திரைப்படத்துறையில் சிறந்து விளங்கும் நடிகராக மம்தா பானர்ஜியை ஏற்கெனவே கமல் சந்தித்திருக்கிறார்.

தற்போது அரசியல் களத்தில் கால் பதிக்க இருப்பதால் அரசியல் கட்சிச் செயல்பாடுகள் குறித்து மம்தா விடம் ஆலோசனைகளைப் பெறு வதற்காக அவர் கோல்கத்தா சென்றிருப்பதாகக் கூறப்பட்டது. ஏற்கெனவே கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்த கமல் அவரிடம் அரசியல் ஆலோ சனைகளைப் பெற்றார். அடுத்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கமலின் வீடு தேடி வந்து சந்தித்தார்.