சவூதியிலிருந்து மீண்டு வந்த பெண்

சவூதியிலிருந்து மீண்டு வந்த பெண்

1 mins read

ஜலந்தர்: பயண முகவரின் ஆசை வார்த்தைகளை நம்பி சவூதி அரேபியாவில் சிக்கிக்கொண்டு அடிமைபோல் வீட்டு வேலை செய்து வந்த பஞ்சாப்பைச் சேர்ந்த பெண் அண்மையில் மீட்கப்பட்டு இந்தியா திரும்பியுள்ள நிலையில் அங்கிருந்த அவருடைய மகளும் மீட்கப்பட்டு நாடு திரும்பினார். இவர்களை மீட்க பஞ்சாபில் காங்கிரசு தலைமையிலான ஆட்சி பகீரத முயற்சிகளை மேற்கொண் டது.

ஜலந்தரைச் சேர்ந்த குர்பாஷ் கவுர், வயது 40, அவருடைய மகள் ரீனா ராணி கவுர், வயது 21 ஆகியோருக்கு மலேசியாவில் நல்ல சம்பளத்தில் வேலை வாங் கித் தருவதாக பயண முகவர் ஒருவர் கூறியிருந்தார்.