தமிழ்நாட்டில் பல ஆண்டுகால மாக நீடித்து வரும் திமுக=காங் கிரஸ் உறவில் விரிசல் விழுந் திருப்பதற்கான அறிகுறிகள் தெரியவந்து இருக்கின்றன. அண்மையில் சென்னைக்கு சென்ற பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்த தும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் செயல்பாடு களும் அந்த அறிகுறிகளுக்கு காரணமாக இருப்பதாக திமுக வில் பேச்சு அடிபடுகிறது. பிரதமர் மோடி=கருணாநிதி சந்திப்பில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று திமுக கூறினாலும் அந்தச் சந்திப்பில் அரசியல் இருக்கிறது என்றும் தமிழ்நாட்டில் விரைவில் அரசியல் மாற்றம் நிகழும் என்றும் பாஜக வில் சிலர் கூறிவருகிறார்கள்.
மாநிலத்தில் திமுக=பாஜக கூட்டு ஏற்படாவிட்டாலும் காங் கிரஸ் கட்சியைத் திமுக கழற்றி விட்டுவிட்டால் அதுவே மாநிலத் தில் தனக்குப் புதிய தெம்பாக ஆகிவிடும் என்று பாஜக கணிக் கிறது. இப்படி ஒரு சூழல் நேர்ந் தால் தமிழ்நாட்டிலும் தன்னைவிட காங்கிரஸ் கட்சி எடுப்பாக அர சியல் நடத்த முடியாமல் போய் விடும் என பாஜக கணிக்கிறது. அண்மையில் பணமதிப்பு நீக்கத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியும் திமுகவும் தனித்தனியாக போராட்டம் நடத் தியதையும் இரு கட்சிகளுக்கு இடையிலான பிளவுக்கு அறிகுறி என்று கட்சித்தரப்பினர் சுட்டிக் காட்டுகிறார்கள்.

