இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் 1,800 அதிகாரிகள் 180க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்திவரும் வருமான வரி சோதனையையொட்டி ஜெயா டிவியின் நிர்வாக இயக்குநர் விவேக் ஜெயராமன் நிர்வகித்து வந்ததாகக் கூறப்படும் குறைந்த பட்சம் 100 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு இருக்கின்றன. விவேக், இப்போது சிறையில் இருக்கும் அதிமுக பிரமுகர் விகே சசிகலாவின் உறவினரா வார். இந்த விவரங்களை வரு மான வரித்துறை தகவல் வட் டாரங்கள் தெரிவித்துள்ளன.
சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளிதழ் உள்ளிட்ட 188க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடந்துள்ளன. ரூ. 6 கோடி ரொக்கம், 8.5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ. 1,200 கோடி முதலீடு தொடர் பான ஆவணங்கள் உள்ளிட்ட பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன. விவேக் நிர்வகித்து வந்த 100க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் 20க்கும் மேற் பட்டவை போலியானவை என்பது தெரியவந்துள்ளது. இந்தக் கணக்குகளைக் கொண்டு விவேக்கும் அவ ருக்கு உடந்தையானவர்களும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகளையும் அசையா சொத்துகளையும் வாங்கி இருக்கிறார்கள் என்பது தெரியவந்திருப்பதாகவும் வரு மான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

